1970 ஆம் ஆண்டுகள் வாக்கில் நம் கிராமத்தின் அன்றைய இளைஞர்கள் ஒன்று கூடி மேலத்தெருவில் (தனபால் செட்டியார் கடை)கீரத்தூரான் முச்சந்தியில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார்கள்.அதன் பெயர் தான் முத்தமிழ் மன்றம். இதில் முந்நின்று நடத்தியவர்கள் வருமாறு: திரு.பன்னீர் செல்வம் வடக்குத்தெரு திரு.முருகையன் நடுத்தெரு திரு.திருச்சிற்றம்பலம் மேலத்தெரு திரு.ராமச்சந்திரன்(எஸ்.ஆர்.சி) வடக்குத்தெரு திரு.திருஞானம் (குப்பாயி வீடு) நடுத்தெரு திரு.அப்பு.ராமச்சந்திரன் வடக்குத்தெரு திரு.சாம்பசிவம் வடக்குத்தெரு திரு.சாமியய்யன் வடக்குத்தெரு திரு.பழனிவேல் நடுத்தெரு திரு.அருணாசலம் கீழத்தெரு திரு.ராமலிங்கம் (குஞ்சாயிவீடு) மேலதெரு திரு.வீரச்சாமி மேலத்தெரு திரு.ராமலிங்கம் (கருப்பூராம் வீடு) மேலத்தெரு திரு.திருஞானம் (மேலவீடு) நடுத்தெரு திரு.ராமச்சந்திரன் நடுத்தெரு திரு.திருநாவுக்கரசு வடக்குதெரு திரு.விஸ்வலிங்கம் நடுத்தெரு திரு.வேலயுதம்(சுக்கிரியன் வீடு) மேலத்தெரு திரு.முத்துராமலிங்கம் வடக்குத்தெரு திரு.கணேசன் மேலத்தெரு மேற்கூறிய பெரியோர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஏற்படுத்திய அமைப்புதான் இது. இவ்வமைப்பு அப்போதைய காலகட்டத்தில் நடைபெற்ற சமுதாயம் தழுவிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பல அரும்பெரும் வெற்றிகளை கபடி,கைப்பந்து மற்றும் ஓட்டப்பந்தய தடகள போட்டிகளில் வெற்றிவாகைச் சூடி வந்துள்ளமையை பல பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறோம். பெரும்பாலும் இவமைப்பானது விளையாட்டுப் போட்டிகளையே முன்னிறுத்தி இயங்கி வந்துள்ளது.ஏதேனும் ஒரு போட்டி ஒரு இடத்தில் நடபெருகிறது என வைத்துக்கொண்டால் அச்சமயத்தில் அங்குள்ளவர்கள் ஒன்று கூடி அவர்களில் ஒருவரை குழுத்தலைவராக தேர்ந்தெடுத்து அவர் வழி நடப்பது வெற்றிகளை குவிப்பது, பின்பு அத்துடன் அந்த குழு தலைவர் என்பதும் முடிவடைந்து விடும்.அடுத்த போட்டிக்கு அடுத்தவர் என மாறி மாறி வாய்ப்புகள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.இதனால் யார் பெரியவர் என்ற பாகுபாடு எப்பொதும் இவர்களுக்குள் தோன்றியதே இல்லை. இது சுமார் பத்தாண்டு காலம் நடந்தேறியுள்ளது.அதன் பின் ஏற்பட்ட காலச் சுழற்சிகளால் பொருள் தேடவேண்டிய காலத்தின் கட்டாயம் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் அதன் காரணத்தினாலேயே தொடர்ந்து நடைபெறாமல் தடைபட்டிருக்கும் என கருதுகிறேன். இத்தகையச் சூழலில் கடந்த 1996 ஆம் ஆண்டில் இப்போதைய இளைஞர்கள் ஒன்று கூடி மீண்டும் முத்தமிழ் மன்றத்தை எடுத்து நடத்துவது என தீர்மானித்தனர். அந்த ஆண்டில் மே மாதம் தொடக்கவிழாவை முப்பெரும் விழாவாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.(மே தின விழா, முத்தமிழ் மன்ற தொடக்க விழா மற்றும் முத்தமிழ் மன்றத்தின் வெள்ளி விழா நிறைவு). அதனை முன்னிட்டு தஞ்சை-கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர்களை அழைத்து மாபெரும் இலக்கிய பட்டிமன்றம் நடத்தப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக அடுத்தாண்டு முதல் காணும் பொங்கல் அன்று சிறியவர்களுக்கும்,இளைஞர்களுக் கும்,பெரியவர்களுக்கும் மற்றும் மகளிர்க்கும் விளையாட்டு,பொது அறிவு போட்டிகளை நடத்தி அவர்களில் வெற்றி பெறுவோர்க்கு அங்குள்ளவர்களில் முதியவர்களை வைத்து பரிசுகளையும் வழங்கி வந்தார்கள். இது ஒரு பதினோறாண்டுகாலம் நடந்து வந்தது. |
பொது சேவை குழுக்கள் >