மாணவர் பேரவை


தொடக்கம்:

1995 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி காசாங்காட்டின் மாணவ பருவத்தினர் அனைவரும் ஒன்றுகூடி ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தனர். அது காசாங்காடு மாணவர் பேரவை என்பதாகும்.

நோக்கம்:

நம் கிராமத்தின் மாணவர்களின் சமூகசிந்தனைகளை ஊக்கப்படுத்தவும், பொதுச்சேவையை தம் பள்ளி பருவத்தில் பழக்கபடுத்தவும், பொதுக் கல்வி- கேள்விகளில் சிறந்தவர்களாக மாணவர்கள் தம்மை உருவாக்கிக்கொள்ளவும் இவ்வமைப்பு உறுதுணையாக இருந்தது.

அமைப்பின் விபரம்:

இவ்வமைப்பிற்கு கிராமத்தின் முழுவதிலுமிருந்து உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பொதுப்பேரவைக் கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமம் முழுவதிலும் இருந்து 72 மாணவர்கள் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

அமைப்பிற்கு தலைமை பதவிகள் வேண்டாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் கலந்துகொண்டவர்களின் ஏகோபித்த முடிவின் படி தெருவிற்கு இருவர் பொறுப்பாளர்களாக நியமிப்பது எனவும், ஊர் மொத்தத்தில்- தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் நியமிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

ஆண்டிற்கு இருமுறையேனும் கூடி கிராமத்தில் செய்யவேண்டிய சமூக பணிகள் குறித்து கலந்தாலோசிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதற்காக குழு அமைக்கப்பட்டு குழுவின் ஏகோபித்த முடிவின்படி கீழ் வருபவர்கள் பொருப்பாளர்கள் ஆனார்கள். 

பொறுப்பாளர்களின் பெயர் வருமாறு:

கீழத்தெரு:

திரு. வீ.வீரபாண்டியன்
திரு.ஆ.அய்யநாதன்

தெற்குத்தெரு:

திரு. வீ.இராமநாதன்
திரு. வெ.இராஜகுமார்
திரு. கோ.ரவிச்சந்திரன்

நடுத்தெரு:

திரு. ரெ.பிரேம்குமார்
திரு. த.அருள்குமார்

பிலாவடிக்கொல்லை:

திரு. வை.ரெங்கராஜ்

வடக்குத்தெரு:

திரு. ப.கார்க்கி
திரு. வீ.இளங்கோ

மேலத்தெரு:

திரு. தி.கோபிநாத்
திரு. இரா.குணசேகரன்

ஒட்டுமொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

திரு. அ.சுகுமாரன்- தலைவர்
திரு. அ.மணிவண்ணன்- பொதுச்செயலாளர்
திரு. வீ.ஜெயபிரகாஷ் - துணைப்பொதுச்செயலாளர்
திரு. ச.தமிழ்க்காவலன்- பொருளாளர்

உறுப்பினர்கள் :

இதன் உறுப்பினர்களாக 6 ஆம் வகுப்பிற்கு மேல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை இதன் உறுப்பினர்கள் ஆகலாம். இதன் உறுப்பினர்கள் விபரம் திரு.சுகுமாரன் அவர்களிடம் உள்ளது. சுமார் 180 க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

செயல்பாடுகள்:

இதன்படி பள்ளி மாணவர்களில் சில ஏழை ஆதிதிராவிட மாணவர்களுக்கு சீருடை மற்றும் குறிப்பேடுகள் வாங்கித்தரப்பட்டன.

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தம் கவிதைகள் மூலம் அறிவுரைகளையும் பகுத்தறிவினையும் புகட்டியவர் மண்ணின் மைந்தர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவரைப் போற்றி அரசு 1995 ஆம் ஆண்டின் இறுதியில் பட்டுக்கோட்டையில்(மணிக்கூண்டு அருகில்) வெண்கலத்தினால் ஆன சிலையையும், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒரு மணிமண்டபத்தையும் ஏற்படுத்தியது. அவற்றின் தொடக்க விழாவில் இளைஞர்கள் நம்மூரின் சார்பில் பெரிய அளவில் கலந்து கொள்வது என தீர்மானித்து அதன்படி கலந்து கொண்டார்கள்.

1996 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி கவிஞரின் பிறந்தநாள் அன்று அவருடைய திருஉருவச்சிலைக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. கு.கோ.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இன்று வரை நம்மவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும்.

1996 ஆம் ஆண்டு பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்த அவசியமற்ற முட்புதர்கள் அகற்றப்பட்டன. இதனை திரு.ஜெயபிரகாஷ் மற்றும் அய்யநாதன் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு செய்தனர்.

மாணவர்களின் நிலைமைகளுக்கு ஏற்ப அவரவர் படித்த கல்லூரிகளில் பள்ளிகளில் தாமே முன்வந்து இரத்ததானம் வழங்கினர்.

2001 ஆம் ஆண்டு நடந்த காசாங்காடு திருக்கோயில்கள் குடமுழுக்கு விழாவின் போது அமைதியையும் கட்டுப்பாட்டையும் மக்களுக்கு வழங்கினார்கள். அன்று நடைபெற்ற பிரமாண்டமான அன்னதான நிகழ்ச்சிக்கு மக்கள் அனைவரும் அமைதியாகச்சென்று அதில் பங்கெடுத்துக்கொள்ள வழிவகைசெய்தார்கள். மொத்த நிகழ்ச்சிக்கும் கட்டுப்பாட்டுடன் கூடிய பாதுகாப்பினை மக்களுக்கு
நம்மவர்கள் வழங்கினார்கள்.அதன் பிறகு வந்த ஒவ்வொரு ஆண்டு வைகாசிவிசாகத் திருவிழாவின் போதும் கண்ணியமான பாதுகாப்பை ஏற்படுத்தினார்கள்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 26-ல் ஏற்பட்ட குஜராத் பூகம்பத்திற்கு நம் கிராமத்தில் நிதி மற்றும் பொருட்கள் திரட்டப்பட்டன. அதில் திரு. மணிவண்ணன் மற்றும் நம் பேரவையைச் சார்ந்தோர் திரளாகச்சென்று தீவிரமாக உழைத்து மிகப்பெரும் நிதியை(ரூ.75000)த்திரட்டி காசாங்காடு வழங்குவதற்கு பேருதவி புரிந்தனர். அதே ஆண்டு ஏற்பட்ட ஒரிஸ்ஸா வெள்ள நிவாரணத்திற்கும் பொருள் மற்றும் நிதி(ரூ.25000) திரட்ட உதவி செய்தார்கள். 

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நாகை மற்றும் வேளாங்கன்னி சென்று மாணவர் பேரவையைச் சேர்ந்த திரு.வீ. ஜெயபிரகாஷ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் உடனடிச் சேவை புரிந்தார்கள்.

இப்படி ஆண்டு தோறும் ஏற்படுகிற சமுதாய, சமூகத் தேவைகளுக்கேற்ப நம்முடைய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒருவர் அங்கில்லை என்றாலும் மற்றவர் அவ்விடத்தை நிரப்பி பணிகள் செவ்வனே நடைபெற பாடுபடுவர். இத்தகையச் செயல்கள் தான் தொண்டு மனப்பான்மையைத் துண்டும். இளைஞர்களை எழுச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.

ஆண்டிற்கு இருமுறை பேரவைக் கூட்டபடவில்லையெனினும் எல்லாருடைய மனதிலும் ஒரு எண்ணம் உள்ளது. அது மீண்டும் இத்தகைய சமூகப் பணிகளிளைச்செய்ய நமக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது என்பதுதான். இப்போதும் இதயங்களில் இப்பேரவை இயக்கத்துடனே உள்ளது.
Comments