ஐயா இராசு



ஐயா இராசு. அவர்கள் 1926  ஆம் ஆண்டு திரு. ராமசாமி, தஞ்சவூராம்வீடு அவர்களுக்கு மகனாக காசாங்காட்டின் மண்ணில் பிறந்தார்.   பிறக்கும் போது ஏழையாக பிறந்ததால் முறையான கல்வி கற்க முடியவில்லை. தனது முயற்சியால் 1960 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார். 1960  ஆண்டு முதல் செய்தித்தாள் விநியோக தொழிலில் ஈடுபட்டு கடின உழைப்புடன் தனது குடும்பத்தை முன்னேற்றமடைய செய்தார்.

வெளிநாடு மட்டுமன்றி தனது நாட்டு மற்றும் கிராம மக்களுக்கும் பயன்படும் வகையில் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிராமத்தின் ஒன்றியமான மதுக்கூரில் அரிசி ஆலை தொடங்க முன்வாந்தார். 1978  ஆம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடனும் தனது கனவுகளோடு அரிசி ஆலையை ஆரம்பித்தார். இதம் மூலம் மதுக்கூர் ஒன்றியத்தை சுற்றி வாழ் கிராமங்களுக்கு பெருதுவியாய் அமைந்தது.

இந்த அரிசி ஆலை #146, அதிராம்பட்டினம் சாலை, மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

அரிசி ஆலையை பெரும் வெற்றியுடன் நடத்தியவுடன், மேலும் பல தொழில்களை செய்து மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் குறிக்கோளோடு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முன்வந்தார். இதன் மூலம் 1995  ஆம் ஆண்டு ஜெயராஜ் போக்குவரத்து நிறுவனம் அன்று ஆரம்பித்து இரண்டு பேருந்துகளை காசாங்காடு மூலம் இயக்குவதற்கு ஆரம்பித்தார்.

இரு பேருந்துகளும் பட்டுகோட்டை தொடங்கி மன்னார்குடி சென்றடைகிறது.
ஒரு பேருந்து மூன்று வழிகளில் செல்கின்றது,


முதல் பேருந்து:
அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்
அணைக்காடு, துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்
நாட்டுச்சாலை, மதுக்கூர்

இரண்டாம் பேருந்து:
அணைக்காடு, துவரங்குறிச்சி, காசாங்காடு, மதுக்கூர்
நாட்டுச்சாலை, மதுக்கூர்

அனைத்து தொழில்களும் இன்றும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மற்றுமன்றி காசாங்காடு கிராம மக்கள்  சிறப்புடன் இருக்க நன்கொடைகளை வழங்கியுள்ளார்.  இவருடைய பெரும்பங்கு,

  1. கிராம அரசாங்க பள்ளி கட்டிடத்திற்கு
  2. கோவில்கள் புதிப்பிக்கும் பணிக்கு
  3. விஸ்வநாதன் அரகட்டளைக்கு
இதற்க்கு 1,50,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

ஐயா. இராசு அவர்கள் காசாங்காடு கிராம இளைஞர்களுக்கும் மற்றும் கிராமத்தினரின் உழைப்பிற்கும் என்றும் எடுத்துகாட்டாய் விளங்குவார்.