விவசாயம்


விவசாயத்திற்கு பயன்படுத்திய வாகனங்களின் வரலாறு.

மரவண்டி பயன்பாட்டிற்கு முன் கிராமத்தில் என்ன வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது தெரியுமேனின் பகிர்ந்து கொள்ளவும்.

மர மாட்டு வண்டி:

மர அச்சுகளிளால் ஆன விளிம்புகளில் இரும்பு பட்டையுடன் கூடிய மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்தது. தற்போதும் ஒரு சில வீடுகளில் இந்த வண்டிகளை பார்க்கலாம்.

டயர் மாட்டு வண்டி:

மாடுகளுக்கு எளிதாகவும் பயணிப்பதற்கு எளிதாகவும் (7.00-19/8.00-19) அளவுள்ள டயர் வண்டிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதற்க்கு முன்பு இருந்த வண்டிகளை விட பராமரிப்பு செலவு குறைந்தது. இதனால் ஆசாரிகளை நம்பி இருக்க வேண்டிய காலம் நகர்ந்து விட்டது. நவீன உலகின் இரும்பு பட்டறைகளில் தான் இந்த வண்டியை பராமரிக்கபடுகின்றது. பெரும்பாலான வீடுகளில் தற்போது (2010) இதை பார்க்கலாம்.

காற்றுக்குழாய் வண்டி: (Tractor)

நவீன விவசாய முன்னேற்றத்தின் பாதையில் 1970 இருந்தே காற்றுக்குழாய் வண்டிகள் கிராமத்தில் புழக்கத்தில் இருந்தது. இதன் மூலம் நிலங்களை உழுவதற்கு தேவைப்படும் மனித ஆற்றலை விலக்கிவிட்டு இயந்திர ஆற்றல் பயன்படிற்கு வந்தது.

போக்கு வண்டிகள்: (Tempo)

சிறிய நான்கு சக்கர வண்டிகள் இன்று பயன்பாட்டில் உள்ளது. சிறிய தேவைகளுக்கு இன்று பயன்பத்தபடுகிறது.

Comments