கிராமத்திளிரிந்து வெளியூர் பயணிக்க கிராம மக்கள் பயன்படுத்திய வாகனங்களின் வரலாறு. மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் முன் கிராமத்தில் என்ன வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது தெரியுமேனின் பகிர்ந்து கொள்ளவும். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திரு. பி.என்.இராமச்சந்திரன் அவர்கள் அதிக வாக்குகளை காசாங்காட்டில் பெற்றார். இக்காரணத்தால் அதேவருடத்தில் காசாங்காட்டின் பெரும்பாலான அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டார். அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த அரசுப் போக்குவரத்துக்கழகம் தடம் எண்: 20 அதுவரை ரெகுநாதபுரம் சென்று தடம் எண் 7, எஸ்.டி.லிங்கம்- சித்திவினாயகர்-சுந்தர லெட்சுமி, சந்திரா- ராஜா போன்ற பேருந்துகளில் பயணித்த மக்களுக்கு விடிவு ஏற்பட்டு ஊரின் குறுக்கில் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மதுக்கூருக்கோ அல்லது பட்டுக்கோட்டைக்கோ செல்லும் வசதிகிடைத்தது. பேருந்துகள் வருவதற்கு முன், வெளியூர்களுக்கு மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் மூலம் வெளியூர் சென்றடைந்தார்கள். நடை பயணம் மூலமாகவும் அருகில் உள்ள நகரங்களுக்கு சென்றடைந்தார்கள். 1987 ஆம் ஆண்டில் தடம் எண்: 20 மாற்றப்பட்டு தடம் எண்: 28 புதிதாக விடப்பட்டது. போக்குவரத்தில் தன்னிறைவு பெறாத காரணத்தினால் தான் ஊரில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது. சுமார் 900 வீடுகள் கொண்ட நம் ஊரில் சற்றேரக்குறைய 350 இரு சக்கர வாகனங்கள் இருக்க கூடும். நான்கு சக்கர சிறிய, பெரிய வண்டிகளும் இன்று பயன்பாட்டில் உள்ளது. சிறு பேருந்துகளால் வருமானம் குறைந்துவிட்ட அரசுப் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு நான்கு முறைகள் மட்டும் வந்துசெல்லத் தொடங்கி ஓடிக்கொண்டிருகின்றன. அவற்றின் தடம் எண்களும் மாற்றம் செய்யப்பட்டு 428, 728, 341 என எண்கள் நிலையில்லாமல் மாறிக்கொண்டிருக்கிறது. வேன், காற்றுக்குழாய் வண்டிகள் (ட்ராக்டர்), பாரமேற்றும் திறந்த மோட்டார் வண்டி(லாரி) மூலமாகவும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய பயன்படுத்தப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் முதல்வர் பதவி ஏற்ற கலைஞர் திரு. முத்துவேல் கருணாநிதி சிறுபேருந்துகளை கிராமங்களில் அறிமுகம் செய்ததன் மூலம் தம்பு-விஸ்வா-வீரா, லிங்கம், கிருஷ்ணா-எஸ்.எஸ்.எஸ் மற்றும் வீரனார்-அய்யா போன்ற சில சிறுபேருந்துகள் ஊரின் குறுக்கிலும் நெடுக்கிலும் ஒடத்தொடங்கின. |
போக்குவரத்து >