தொடங்கிய தேதி: முடிவுற்ற
தேதி: அரசு பதிவு எண்: பதிவு முகவரி: தொடங்க மூல காரணம்: ஐயா. விஸ்வநாதன் அவர்களின் தொண்டுகளை கிராமத்திற்கு தொடர்ந்து பணியாற்ற.நிதி
மூலம்: கிராம மக்களின் தொண்டு நிதி, கிராமத்தில் சில அரசாங்க சொத்து வருமானம்கிராமதிர்க்காக செலவு செய்த விபரம்: உறுப்பினர்கள் விபரங்கள்: பள்ளிக்கான சேவை: 1990 ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த
விஸ்வநாதன் அறக்கட்டளை அரசுமேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும்
விழாக்களை ஏற்படுத்தி 10 மற்றும் 12 வகுப்புகளில் பள்ளியில் முதல்
மூன்று இடங்கள் பெற்றவர்களையும் சிறப்பான மதிப்பெண்கள்
பெற்றவர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்குவதுண்டு.மணவர்களை
ஊக்கப்படுத்த எல்லா வழிகளிலும் முயற்சி செய்தனர்.பள்ளிக்கு தேவையான
மேசை,நாற்காலிகள்,மாணவர்கள் அமரும் பெஞ்சுகள்,குடிநீர் வசதி மற்றும்
பள்ளிக்கான கூரை வரை எல்லா விதமான தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டன.
அதுபோல் நடந்ததால் நம் மாணவர்களின் கல்வி நிலையும் பள்ளியின் கல்வித்
தரமும் உயர்ந்தது. பொதுமக்களுக்கான சேவை: ஐயா திரு.விஸ்வநாதன் அறக்கட்டளை
1990 ஆண்டில் சிங்கப்பூரில் வாழும் காசாங்காட்டினராலும்,
காசாங்காட்டில் உள்ள சிலரும் ஒருங்கிணைந்து தொடங்கப்பட்டது. அப்போதே
அறக்கட்டளை அலுவலகத்தில் ஒரு படிப்பகமும் தொடங்கப்பட்டது.அதில் பயன்
தரத்தக்க நூல்களும்,ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில
தினசரிகளும், பல வார இதழ்களும் சில மாத இதழ்களும் இடம்பெற்றிருந்தன. ஆன்மீக அறசேவை: நம் ஊரின் மாரியம்மன் கோவில்,சிவன் கோவில்
மற்றும் பிள்ளையார் கொவில் ஆகியவற்றின் நீண்ட நாட்கள் செய்யப்படாமல்
இருந்த திருப்பணியை ஏற்றெடுத்து சிங்கப்பூர் வாழ் காசாங்காடு
வாசிகளிடமும் மற்ற ஏனைய வெளிநாடுகள் வாழ் காசாங்காடு வாசிகளிடமும்,
காசாங்காட்டிலும் நிதி வசூலிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில்
மூன்று கோயில்களின் திருப்பணியை செவ்வணே நடத்திமுடித்தது. இதனுடன் கூட திருமண அரங்கத்தையும் காசாங்காட்டின் பங்குத்தொகயை தாமே
கட்டி அதனையும் ஏக காலத்தில் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தது. |