காசாங்காடு கிராமத்தில், அறுவடை துவக்கத்தை கொண்டு கொண்டாடும் நாளாம் போகி திருநாள். வீட்டு சுத்தம், தேவையற்ற பொருட்கள் நீக்கம்: இன்று வீட்டினை சுத்தம் செய்வர். தேவையற்ற பொருட்களை, வீட்டின் தூசிகளை சுத்தம் செய்யும் நாளாகும். மண் தரை வீடுகளில் பசு சாணம் கொண்டு மொழுகி விடுவர். சிமிட்டி (Cement) வீடுகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்வர். பழிங்கு கல் (Marble) வீடுகளில் தண்ணீர் விட்டு / துணியில் தண்ணீர் நனைத்து சுத்தம் செய்வர். சுத்தம் செய்த பொருட்களை குப்பைகளில் வழக்கம் மட்டுமே உள்ளது. அவைகள் மக்கி பின்பு உரமாக பயன்படுத்தப்படும். வரிசை சடங்கு: உறவுகளை மதிக்கும் வண்ணம் மற்றும் சம்பந்திகளை / உறுவுகளை சந்தித்து பழகி கொள்ளும் தருணமாக பின்பற்றப்படும் சடங்கு இது. திருமணம் செய்து கொடுத்த பெண் வீட்டார்கள் அவர்கள் திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்கு பொங்கல் வைக்க (அதற்க்கு மேலும்) தேவையான பொருட்கள் அவர்காளின் பங்காளிகளை அழைத்து கொண்டு கொடுக்க செல்வார்கள். வரிசை பொருட்களை கட்டி / போட்டு அனுப்புவதற்கு ஓலை பேட்டிகள் பயன்படுத்தபடுகிறது. வெறும் ஓலை பெட்டிகளை திரும்பி அனுப்பாமல், சிலவற்றை அதில் மறுபடியும் கொடுத்து அனுப்புவார்கள். ஒலைபெட்டிகள் அனைத்தும் அட்டைபெட்டிகளாய் மாறிவிட்டன. திரும்பி அனுப்பும் பழக்கமும் தற்போது இல்லை. இதில் தலை வரிசை (திருமணம் முடிந்து முதல் வருடம் கொடுக்கும் வரிசை) சிறப்பானது. திருமணமான பெண் தனக்கு தேவையானதை பிறந்த வீட்டில் இருந்து (தாய் தந்தையரின் பாசத்துடன்) பெற்று கொள்வாள். இந்த சடங்கிற்கு திருமணம் செய்து கொடுத்த பெண் வெளிநாட்டில் / வெளி ஊர்களில் இருந்தாலும் பின்பற்றபடுகிறது. உறவுகள் அனைவரும் வெளிநாட்டில் இருந்தாலும் இந்த சடங்கு பின்பற்றபடுகிறது. முன்னேற்றம் என்ற பாதையில் வெறும் பணம் மற்றும் இந்த காலத்தில் பரிமாறிகொள்ளபடுகிறது. இதை நீக்கவும் முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரிசை கொண்டு வரும் உறவினர்களுக்கு சிறந்த விருந்து வழங்குதல் முறையாகும். அசைவ உணவே சிறந்தது என்று தற்காலிக நாகரிகம் கற்று தந்திருகின்றது. சமையல்: ஆட்டுக்கறி குழம்பு சமைப்பது வழக்கத்தில் உள்ளது. |
பண்டிகைகள் >