கல்வி‎ > ‎

அரசு மேல்நிலை பள்ளி


அரசு மேல்நிலை பள்ளியின் வரலாற்று சுருக்கம்:

தொடங்கிய ஆண்டு: 1962
பள்ளி வகுப்புகள்: 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை
பள்ளியின் வசதிகள்: மைதானம், ஆய்வுகூடம்
கல்வி தரங்கள்: மாநில கல்வி தரம் மட்டும்
பயிற்பிக்கபடும் மொழிகள்: தமிழ், ஆங்கிலம்
 



விரிவான வரலாறு:

1962 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி முறைப்படி உயர்நிலை வரை கொண்டு தொடங்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டுக்குப்பின்பு தமிழக அரசின் முடிவின்படி  PUC முறை மாற்றப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் என புதுமுறை அறிமுகப்படுத்தப்பட்டு +1,+2 என்றவகுப்புகள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி நம் பள்ளியை 1984 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி என தரம் உயர்த்தி அனுமதி வழங்கப்பட்டது. அதனுடன் அவ்வாண்டிலேயே பெண்களுக்கான ஆசிரியப் பயிற்சிப்பள்ளிக்கான அனுமதியும் அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.பி.என்.இராமச்சந்திரன் மற்றும் ஐயா திரு.விஸ்வநாதன் ஆகியோருடைய பெருமுயற்சியினால் கிடைக்கப்பெற்றது. இந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளி மூலம் 3 அமர்வு மாணவர்கள் அமர்விற்கு தலா 24 வீதம் 72 ஆசிரியைகளை உருவாக்கி இன்று அவர்கள் நம் பகுதி முழுவதிலும் உள்ள பல பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரிய பள்ளி நம் மேல்நிலைப்பள்ளி.

பள்ளி சுற்று சுவர்:

பாடம் கற்று தருவது எங்கள் பள்ளி ஆசிரியர் மட்டும் அல்ல. எங்கள் பள்ளி சுவரும் தான்.
பள்ளி சுற்று சுவர் சிங்கப்பூர் வாழ் கிராம வாசிகளால் நிதியுதவி பெற்று கட்டப்பட்டது.


விளையாட்டு மைதானம்:

பள்ளி வளாகத்தில் இருந்த பல்வேறுபட்ட குடும்பங்களுக்குச் சொந்தமான கூட்டு நிலங்கள் மற்றும் தனி நிலங்கள் ஐயா திரு.விஸ்வநாதன், ஐயா திரு.தம்பிஅய்யன், ஐயா திரு.மொ.ரா.சின்னத்தம்பி ஆகியோருடைய முற்போக்கான நடவடிக்கைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 12 1/4(பன்னிரெண்டே கால்) ஏக்கரில் மாபெரும் பள்ளி விளையாட்டுமைதானம் உருவாக்கப்பட்டது. அம்மைதானத்திற்கு 1984 ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரில் வாழும் காசாங்காடு பெரியோர்களால் கொடுக்கப்பட்ட பெருந்தொகையால் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பள்ளியின் கம்பீரத்தோற்றம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே மிகப்பெரிய விளையாட்டுமைதானத்தைப் பெற்றிருக்கக்கூடிய முதன்மையான பள்ளி என்ற பெருமையைப்பெற உதவலாயிற்று.

1990 ஆம் ஆண்டு சுற்றுசுவர் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது அதோடு ஆய்வு கூட பணியும் நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டில் சுற்று சுவருக்கும், ஆய்வுக்கூட கட்டிட திறப்புவிழாவுடன் சேர்த்து முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது.

அறிவியல் ஆய்வுக்கூடம்:

1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித்துறை திட்ட ஒதுக்கீட்டின்படி பள்ளியின் அறிவியல் பிரிவிற்கென தனி ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பள்ளி வளாகதின் தென்பகுதியில் மிகச்சிறந்தமுறையில் ஒரு ஆய்வுக்கூடம்கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு.பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பள்ளி கட்டமைப்பு:

2007 ஆம் ஆண்டு அரசு பள்ளி வளர்ச்சிக்குழுவின் பரிந்துறையின் படி பழைய வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு மாடி கட்டிடங்கள் அரசினால் கட்டித்தரப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி குறித்த விபரங்கள் தங்களுக்குத் தெரியுமெனில் பகிர்ந்து கொள்ளவும்.


மாணவர்களிடமும் கிராம மக்களிடமும் புகழ்பெற்ற ஆசிரிய ஆசிரியைகள்:

ஐயா. கோபால்

Comments