காசாங்காடு கிராமத்தில் நவீன காலத்தில் பின்பற்றப்படும் திருமண முறைகள் மற்றும் அதன் பெயர்களும். - அய்யர் திருமணம்
- இவை புரோகிதர் கொண்டு நடத்தப்படும் திருமணம்.
- தலைவர் / மூதாதையர் திருமணம்
- அரசியல் தலைவர் / மூதாதையர் களை கொண்டு நடத்தப்படும் திருமணம்
- கோவில் திருமணம்
- மற்ற திருமண சடங்குகள் அனைத்தும் நடக்கும் படசத்தில், திருமணம் மட்டும் கோவிலில் நடத்தப்படும்.
இந்து மதத்ததில் குறிபிட்டுள்ள திருமண முறைகளில் காசாங்காடு கிராமத்தில் பின்பற்ற படும் திருமண முறைகளை காண்போம். - பிரம்மா விவாஹம்
- வேதங்களை முழுமையாக கற்ற மற்றும் நன்பெயர் கொண்ட மணமகனுக்கு வரன் தேடி திருமணம் செய்தல். இந்த திருமணமே மிக சிறந்த முறை திருமண முறை என்று தர்ம சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
- வரதட்சனை எதுவும் அளிக்கபடுவதில்லை.
- காசாங்காடு கிராமத்தில் இது போன்ற திருமணங்கள் நடைபெற்றுள்ளது. வேதங்களை கற்க வில்லை என்றாலும், நவீன கல்வியை கற்ற மணமகனுக்கு திருமணம் செய்யபட்டுள்ளது.
- தெய்வ விவாஹம்
- மணமகள் வீட்டில் திருமணம் செய்யும் நாட்கள் கடந்த பின், கோவில்களுக்கு சென்று மணமகள் கிடைக்காத மணமகனை தேர்ந்தெடுத்து அந்த இடத்திலேயே திருமணம் செய்து கொள்ளுதல்.
- இந்த வழக்க முறை காசாங்காடு கிராமத்தில் பின்பற்றப்படவில்லை.
- அர்ஷ விவாஹம்
- திருமணத்தில் மணமகள் வீட்டிலிருந்து தட்சணையாக ஒரு பசுவும், இரண்டு காளை மாடுகளும் அளிக்கப்படும்.
- திருமண முறைகளில் எவ்வித பொருளாதார பரிமாற்றங்கள் இல்லாமல் நடக்கும் திருமண முறையே உன்னதமானது.
- இது போன்ற திருமண முறை காசாங்காடு கிராமத்தில் பின்பற்ற பட்டதாக தகவல் இல்லை.
- ராஜபத்ய விவாஹம்
- மணமகள் வீட்டார் மணமகனை தேடி செல்வர்.
- மணமகன் உறுதி செய்த பின் திருமணம் நிச்சயிக்க படும்.
- இந்த திருமண வழக்கம் காசாங்காடு கிராமத்தில் பின்பற்றபட்டுளது.
- காந்தர்வ விவாஹம்
- முழுவதும் காதல் கொண்டு நடத்தப்படும் திருமணம்.
- மணமகள் அல்லது மணமகன் வீட்டினர் கொண்டு முடிவு செய்யபடுவதில்லை.
- இது போன்ற திருமண வழக்கம் சில திருமணங்களில் பின்பற்றபட்டுளது.
- அசுர விவாஹம்
- மணமகன் மணமகள் பொருத்தமில்லமால் நடக்கும் திருமணம்.
- மணமகன் மணமகள் வீட்டிற்கு செல்வத்தை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் முறை.
- இது போன்ற திருமண வழக்கம் காசாங்காடு கிராமத்தில் பின்பற்றபட்டுளது.
- ராக்ஷச விவாஹம்
- மணமகளுக்கு பிடித்திருக்கும், மணமகள் வீட்டாருக்கு பிடித்திருக்காது.
- மணமகள் வீட்டாரை கட்டாயபடுத்தி திருமணம் செய்து கொள்ளும் முறை.
- இது போன்ற திருமண வழக்கம் காசாங்காடு கிராமத்தில் பின்பற்றபட்டுளது.
- பிசாச விவாஹம்
- மணமகளை மயக்கம் செய்து திருமணம் செய்து கொள்ளும் முறை.
- இது போன்ற திருமணம் முறைப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.
- இது போன்ற திருமண முறை காசாங்காடு கிராமத்தில் பின்பற்ற பட்டதாக தகவல் இல்லை.
விடுபட்ட மற்றும் மேலும் தகவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். |
|