அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது எப்படி?

காசாங்காடு திருமணங்களில் அருந்ததி நட்சிரம் பார்ப்பது ஒரு சடங்காக செய்யபடுகிறது.

இந்த நட்சிரத்தின் முக்கியத்துவம்:
இரு நட்சிரங்களும் ஒரு மைய புள்ளியை கொண்டு சுழழும்.
கணவன் மனைவி எவருக்கும் இடைவெளி விட்டு கொடுக்கமால் வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம். 
இருவரும் சேர்ந்தே வாழ்க்கையில் உழைக்க வேண்டும் என்று உணர்த்துவதும் இதுவே.
பின்வரும் கானொளியில் அதன் அறிவியல் விளக்கத்தை அறிந்து கொள்ளலாம். (4:34 வினாடிகளில்)எளிய முறையில் எவ்வாறு நட்சிரத்தை பார்ப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

அருந்ததி நட்சத்திரம் பற்றிய தகவல்கள்:
நட்சத்திர கூட்டம் பெயர்: சப்தரிஷி (ஏழு பெரும் முனிவர்கள்) - Big Dipper - Ursa Major
நட்சிரத்தின் பெயர்: வஷிஷ்ட்டர் - Mizar  (தூரம்: 78.1 ஒளி வருடங்கள், நடுவரை விலக்கம் +54 55′ 31″)


துணை நட்சிரத்தின் பெயர்: அருந்ததி (வஷிஷ்ட்டர் மனைவி) - Alcor (தூரம்: 81.1 ஒளி வருடங்கள், நடுவரை விலக்கம் +54 59' 17")


தாங்கள் பயன்படுத்தும் திறன் தொலைபேசி (SmartPhone)  இயக்க அமைப்பு ,

iOS கொண்டிருந்தால்,

Android கொண்டிருந்தால்,
Android செயலிகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இந்த செயலிகளை திறன் தொலைபேசிகளில் சேர்த்து கொண்டு மேலே கொடுக்கபட்டுள்ள நட்சித்திர விபரங்களை கொண்டு தேடுங்கள். செயலி விண்ணில் எங்கு அந்த நட்ச்சத்திரம் எங்கு உள்ளது என்பது பற்றி தெளிவாக காட்டும்.