1983ஆம் ஆண்டு நம் ஊரின் கிராம உதவி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதற்கான இடம் அந்த ஆண்டில் கிராமத்தினரால் மார்த்தான் வீடு ஐயா நிலப்பகுதியில்(ஊரின் மையப்பகுதி)ஒதுக்கப்பட்டு தனிக்கட்டிடம் கட்டப்பட்டு 1986 முதல் புதிய கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படலாயிற்று. கிராம மக்களின் மருத்துவ வசதி பற்றிய குறிக்கோள்: காசாங்காட்டைப் பொருத்தவரை அன்றும் இன்றும் தொற்றிக்கொண்டுள்ள குறையாதெனில் ஆரம்பசுகாதார நிலையம் நம் ஊரிலேயே தொடங்கப்பட வேண்டும் என்பதுதான். 1989 ஆம் ஆண்டில் அந்தக்குறை நிறைவேறும் என யாவரும் எதிர்பார்த்த தருவாயில் அப்போதைய ஒன்றியப் பெருந்தலைவரால் அத்திவெட்டிக்கு மாற்றப்பட்டது. இதில் அப்போதிருந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.அண்ணாதுரை கண்டுகொள்ளவில்லை என்பது தான் மிகுந்த வருத்தமளிப்பதாக இருந்தது. அதன் பின் காசாங்கட்டின் அந்த ஆரம்ப சுகாதார நிலைய கோரிக்கை நிறைவேறாமலேயே போய்விட்டிருக்கிறது இன்று வரை! கிராமத்தில் பணிபுரிந்த அரசு மருத்துவர்கள்: ஐயா.சிவானந்தம் நீண்டகாலம் பணியாற்றிய பெருமை பேராவூரணியைச் சேர்ந்த ஐயா அவர்களையேச் சாரும். நம் கிராமத்தினரை விரும்பி நம்மூரில் மருத்துவச் சேவை புரிந்தார். கிராமத்தில் மருத்துவர் பட்டம் பயின்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பண்பும் இவரிடத்தில் மிகுந்து காணப்பட்டது. மேலும் மருத்துவமனை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் இணைய குழவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். |
அரசு அலுவலகங்கள் >