திருமண அரங்கின் வரலாற்று சுருக்கம்: கட்டிட திறப்பு நாள்: ஞாயிற்றுகிழமை, தாரண வருடம், 10 தை (23 சனவரி 2005) கட்டிடத்தின் மதிப்பு: ரூ.68 இலட்சம் (ரூ.48 இலட்சம் இந்திய மக்களின் வரிப்பணம், ரூ. 20 இலட்சம் காசாங்காடு கிராம மக்களின் பங்கு) உருவாக மூல காரணம்: தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் அமைவிடம்: ரெகுநாதபுரம், காசாங்காடு கிராமம் விரிவான வரலாறு: மதுக்கூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நம் காசாங்காடு ஊராட்சிக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசினால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 திருமண அரங்குகளில் ஒன்று இவ்வரங்கம். இதற்காகான நிதி கோவில் திருப்பணிக்காக சிங்கப்பூரில் விஸ்வநாதன் அறக்கட்டளையால் காசாங்காட்டைச் சேர்ந்தவர்களிடம் வசூலித்த தொகையிலிருந்து ரூ.20 இலட்சம் அரசாங்கத்திற்கு காசாங்காட்டின் பங்குத்தொகையாகக் கட்டப்பட்டது. அதன் பிறகே அரங்கத்திற்கான அனுமதி கிடத்தது. சுமார் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலான அரங்கம் தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்டு கட்டப்பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டில் 90 சதவீத பணிகள் முடிவடந்த நிலையில் சில சில்லறை பணிகளுக்கான நிதித்தேவைகளால் பணி நின்று போயிருந்தது.பின்பு பலமுறை நம்மூர் பெரியவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சுமார் ரூ.8 இலட்சத்தை அனுமதித்து அரங்கம் கட்டுமானப்பணி நிறைவு பெற உதவியது. ஞாயிற்றுகிழமை, தாரண வருடம், 10 தை (23 சனவரி 2005) அன்று திறக்கப்பட்டது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு 09 பிப்ரவரி (தை 27) திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில், திரு.கோ.சி.மணி, திரு.இரகுபதி, திரு.பழனிமாணிக்கம், திரு.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திருமண அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி அந்த அரங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை விஸ்வநாதன் அறக்கட்டளை ஏற்று எடுத்து நடத்துகிறது. இந்த அரங்கத்தை நம் ஊருக்குப் பெற்றுத்தர அன்றைய மதுக்கூர் ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி. செல்வநாயகி அப்பசாமி பேருதவிபுரிந்தார். கிராமத்தில் திருமண அரங்கம் உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கட்டிடத்தை கட்டிய பொறியாளர்களின் விபரம்: பொறியாளார்: ர.த. பழனிவேலு முகவரி: புது எண்: 9 (பழைய எண்: 5), சரோஜினி தெரு, தியாகராஜா நகர், சென்னை. 600 017 தொலைபேசி எண்: +91-44-24315342 / +91-44-24341884 தொலை பிரதி எண்: +91-44-24315341 கை தொலைபேசி எண்: +91-9841022837 |
அரசு அலுவலகங்கள் >