1983 ஆம் ஆண்டு காசாங்காட்டிற்கான தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் ஊரின் மையப்பகுதியில் செயல் பட்டு வந்தது. இந்த வங்கிக்கு 1989 ஆம் ஆண்டு புதிய கட்டிடம் ஆறுமுகம்குளத்திற்கு கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டு தற்போதும் அங்கு செயல் பட்டுவருகிறது. இதன் எல்லைக்குள் காசாங்காடு, அத்திவட்டி, பிச்சினிக்காடு, வாட்டாகுடி தெற்கு, மூத்தாக்குறிச்சி, சிலம்பவேளாங்காடு, மன்னாங்காடு மற்றும் ரெகுநாதபுரம் ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன. இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் திரு. தி.முத்துசாமி அவர்கள் ஆவார்கள். அவருக்குப் பிறகு 1996 ஆம் ஆண்டு திரு. மு. கணபதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 2003 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் அவர் நீடித்து வந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கி தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த வங்கி குறித்த வேறு தகவல்கள் தங்களுக்கு தெரியுமெனில் பங்கெடுத்து தகவல்களை தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். |
அரசு அலுவலகங்கள் >