தொலைபேசி இணைப்பகம்


காசாங்காடு கிராம தொலைபேசிகள் முதலில் மதுக்கூர் இணைப்பகத்தில் இணைக்கபட்டிருந்தது. பிறகு துவரங்குருச்சி இணைப்பகத்தில் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. இணைப்பகத்தின் தூரம் அதிகமாக இருந்ததால் இணைப்புகள் சரிவர வேலை செய்யவில்லை. அது மட்டுமன்றி கிராம இணைப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. எனவே கிராம மக்கள் ஒன்று கூடி முயற்சி செய்து கிராமத்திற்கு தொலைபேசி இணைப்பகத்தை கொண்டு வந்தனர்.

மிகவும் சமீபத்தில் வந்த இணைப்பகம் என்பதால் நவீன தொலைதொடர்பு வசதிகளுடன் கிடைக்கபெற்றது.

தற்போது இருக்கும் தொலைபேசி இணைப்பகத்தின் விபரங்கள்:

இணைப்பகம் தொடங்கிய தேதி: ஏப்ரல் 2000
இணைப்பகம் இயங்கும் இடம் அளவு: அறுபது சதுர மீட்டர்
இணைப்பாக இணைப்பு வசதி: இழை இணைப்பு (Fiber Link to Thanjavur Exchange)
இணைப்பகத்தின் இரண்டாம் இணைப்பு பகுதி: தஞ்சாவூர்

2010 ஆண்டில் கிராம தொலைபேசி இணைப்பகத்தில் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு கொடுக்க பட்டது.

சிறிய மாறுதல்களுடன் வீடு வழி இழை இணைப்பு வசதி (Fiber to Home - FTTH) வழங்க முடியும்.

வழங்கபட்டிருக்கும் இணைய வசதிகளுடன் கிராமத்திற்கு இணைய வழி சேவைகள் மிகவும் எளிதாய் வழங்க முடியும்.

ஜனவரி  2011 ஆண்டு BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் 174 இணைய இணைப்புகள் இந்த இணைப்பகத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. 

கிராமத்தினரின் தேவைகளுகேர்ப்ப தொலை தொடர்பு வசதிகள் இருப்பது குறிப்பிடதக்கது.
Comments