நம் காசாங்காட்டிற்கான அஞ்சல் நிலையம் முதன் முதலில் 19.11.1942 ஆம் நாள்
மன்னங்காட்டில் திறக்கப்பட்டது.அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு
காசாங்காட்டிற்கு துணை அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது(அஞ்சல் குறியீட்டு
எண்:614910).
பின்பு 1985 ஆம் ஆண்டு நமது காசாங்காடு அஞ்சல் நிலையம் கிளை
அஞ்சலகமாக்கப்பட்டது.மதுக்கூர் துணை அஞ்சல் நிலையமாகியது(அ.கு.எண்:
614903).
பிறகு 1993 ஆம் ஆண்டில் தாமரங்கோட்டை துணை அஞ்சல்
நிலையத்திற்குக்(அ.கு.எண்: 614613) கீழ் கொண்டு வரப்பட்டு தற்போதுவரை
கிளை அஞ்சலகமாகவே இயங்கி வருகிறது.
அஞ்சலக அலுவலர்கள்:- திருமதி.சா.சுமதி சிதம்பரம் (2003- இன்றுவரை) மன்னங்காடு
- திரு.ஆ.சா.சபாபதி (1997-2003) ஆவடையாம்வீடு- தெற்கு தெரு
- செல்வி.வீ.த.சுனிதா (1995-1997) குட்டச்சிவீடு- தெற்கு தெரு
- திரு.வீ.ராமசாமி (1985-1995) குட்டச்சிவீடு- பிலாவடிக்கொல்லை
- திரு.வீ.சிதம்பரம் (1969-1985) குட்டச்சிவீடு- தெற்கு தெரு
- திரு.அ.சிதம்பரம் (1967-1969) குட்டச்சிவீடு- பிலாவடிக்கொல்லை
- ஐயா திரு.இராமசாமி (1947-1967) தியாகுவேளான்வீடு- தெற்கு தெரு
அஞ்சலர்கள்:- திரு.க.குமாரவேலு (1994- இன்றுவரை) பட்டுக்கோட்டை
- திரு.ந.சுந்தர் (1981-1994) வெல்லாம் வீடு- கீழத்தெரு
- திரு.பெ.இராமச்சந்திரன் (1977-1981) பொன்னாங்கன்னிவீடு- நடுத்தெரு
- திரு.வீ.சிதம்பரம் (1967-1969) குட்டச்சிவீடு- தெற்கு தெரு
- திரு.அ.சிதம்பரம் (1947-1967) குட்டச்சிவீடு- பிலாவடிக்கொல்லை
காசாங்காடு அஞ்சல் நிலையம் பற்றிய சுவாரசியமான சம்பவங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். |