1984ஆம் ஆண்டு நம் ஊருக்கு கால்நடை உதவி மருத்துவமனைக் கொண்டு வரப்பட்டது.ஆரம்பகாலத்தில் அப்போதைய பஞ்சாயத்துசபை அலுவலகத்திலேயே(ஊரின் மையப்பகுதியில் உள்ளது)மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டுவந்தது. அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு காசாங்காட்டின் தெற்கு பகுதியில் புதிதாக கால்நடைமருத்துவத்திற்கு தேவையான எல்லா வசதிகளுடன் அரசாங்கத்தின் மூலம் தனிக்கட்டிடம் கட்டப்பட்டு நல்லமுறையில் இயங்கி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.என்.இராமச்சந்திரன் அவர்களின் உதவியோடு ஐயா திரு.விஸ்வநாதன் அவர்களின் பெருமுயற்சியால் அரசு மூலம் செய்த இந்த வசதி, இன்று பெரும் வகையில் காசாங்காடு கிராம மக்களுக்கும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் மிகவும் உதவியாய் அமைகின்றது. இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் பற்றிய விபரம் உங்களுக்கு தெரியுமேனின் பகிர்ந்து கொள்ளவும். இந்த உதவி மருத்துவமனை வருவதற்கு முன் கிராம மக்கள் எங்கு சென்றார்கள்? கிராமத்தில் கால்நடை மருத்துவமனை வருவதற்கு முன், கிராம மக்கள் மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனை நாடி சென்றனர். இதோடு சிங்கார சுவாமிகள் அவர்கள் கிராமத்தில் கால்நடை மருத்துவ பணி புரிந்துள்ளார். (பணி புரிந்த நாட்கள் உங்களுக்கு தெரியுமாயின் பகிர்ந்து கொள்ளவும்) |
அரசு அலுவலகங்கள் >